யாழில் வீதிகளில் அலைந்து திரிந்து நிதி திரட்டல் என்ற பெயரில் மாணவர் துஸ்பிரயோகம்..!! – பாடசாலை அதிபர்களுக்கு யார் குடுத்தது இந்த அதிகாரம்..?

Share this post:

நேற்று காலை யாழ் சுன்னாகம் பகுதியில், பண்ணையில் இருந்து கட்டவிழ்த்துவிட்டு வெளியேறிய ஆடு, மாடுகள் போல் ஏராளமான பாடசாலை மாணவர்கள் கைகளில் தண்ணீர் போத்தல்களுடன் தெருத் தெருவாக அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களில் சிலர் கடைகளில் ஏறி இறங்கி காசு சேகரித்துக் கொண்டு இருப்பதாகவும் அவர்களை சில கடைக்காரர்கள் துரத்துவதாகவும் தெரியவருகின்றது.

காலி மாவட்டத்திலுள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் களேஸ் ஒவ் கரீஜ் நிதியத்தினர் புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றை அமைக்க உள்ளனர்.

அதற்கான நிதி சேகரிப்பில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைச் சமூகத்தினரதும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினதும் ஏற்பாட்டில் எதிர்வரும் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் இருந்து நடைபவணி ஆரம்பமாகி, யாழ்.வீரசிங்கம் மண்டபத்தைச் சென்றடையவுள்ளனர்.

இதனைக் காரணமாக வைத்தே பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் வெளியேறி தெருத்தெருவாக அலைந்து வருகின்றனர். குறித்த மாணவர்களை வீதியில் இறங்கி நிதி சேகரிக்க அனுமதி கொடுத்தது யார்? பாடசாலை அதிபர்களுக்கு மாணவர்களை வீதியில் அலைய வைத்து நிதி சேகரிக்க வைக்கும் அதிகாரம் உள்ளதா?

கற்றல் மற்றும் அதனோடு இணைந்த கல்விசார் நடவடிக்கைகளுக்குமாகவே பெற்றோர் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புகின்றார்கள். பாடசாலை மாணவர்களை வைத்து சேகரிக்கும் மிகக் குறைந்த அளவு நிதி காலியில் அமையவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக் கட்டிடத்திற்கு கட்டாயம் தேவைதானா?

உலக சுகாதார நிதியம், ஐ.நாவின் நிதிஉதவி, உலகவங்கிகளின் நிதி உதவி, மற்றும் உலகில் உள்ள ஏராளமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், இலங்கையில் உள்ள ஆயிரக்கணக்கான அமைப்புக்கள் , தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் போன்றவர்களிடம் இருந்து இவ்வாறான வைத்தியசாலைகளுக்கு தாராளமாகநிதி உதவிகள் கிடைக்கும்.

ஆனால் நடைப் பயணம் மூலம் கிடைக்கும் சொற்ப நிதிஉதவியால் அதுவும் மாணவர்களை வைத்துச் சேர்க்கும் நிதி உதவியால் யாரோ தனிநபர் அல்லது ஒரு குழு தம்மை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் தேடுவதற்கே இவ்வாறான செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக சந்தேகம் தோன்றுகின்றது.

நடைப் பயணத்தை மேற்கொள்பவர்கள் போட்டிருக்கும் ‘ரீசேட்‘ களின் பெறுமதியே பல ஆயிரக்கணக்கான ரூபாக்களாகும். அத்துடன் தண்ணீர்ப் போத்தல்கள், பனர்கள் போன்றவற்றையும் இவர்கள் செலவு செய்யும் ஏனைய செலவுகளுமே நடைப் பயணத்தில் சேகரிக்கும் காசுகள் இவர்களுக்கே தீர்ந்துவிடவும் வாய்ப்புள்ளது.

ni

ni2

Share This:
Loading...

Related Posts

Loading...