யாழில் சிறுமியை சித்திரவதை செய்த சித்திக்கு தொடரும் தண்டனை…!- இவ்வாறானவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை ..!

Share this post:

dfg

யாழ் நீர்வேலிப் பகுதியில் தனது 6 வயதுடைய சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத் தாயை எதிர்வரும் 20-ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறபிப்க்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று உத்தரவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டக் காணியில், சிறுமியொருவரை பெண்ணொருவர் கத்தியினால் மிகமோசமாகத் தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ, கடந்த செப்டெம்பர் மாதம் 22-ம் திகதி முகப்புத்தகத்தில் வைரலாக பரவியது.

அந்த சிறுமியை தாக்கிய தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு விடப்பட்டிருந்தது.

Share This:
Loading...

Related Posts

Loading...