மது போதையில் வாகனம் செலுத்திய வாகன சாரதிகளுக்கு 134,000 ரூபாய் அபராதம்! – சாரதி அனுமதி பத்திரமும் ரத்து – நீதிமன்றம் அதிரடி..!

Share this post:

po

மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 16 பேருக்கு 1 34,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த உத்தரவை கம்பஹா நீதிமன்ற நீதவான் லலித் கன்னங்கர பிறப்பித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 12 பேருக்கு தலா 7 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்துள்ளதுடன் அவர்களின் சாரதி அனுமதி பத்திரத்தை 3 மாதகாலம் தடைசெய்ய கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கர உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் வாகனம் செலுத்தி 4 பேருக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது போன்று இனி மது போதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...