இளம் பெண் ஒருவருக்கு மருத்துவமனையில் ஏற்பட்ட கொடூரம்!! – என்ன நடந்துச்சு தெரியுமா..?

Share this post:

ss

இந்திய – குன்னுர் பிரதேசத்தில் தவறான சிகிச்சையால் இளம் பெண்ணின் உடல் முழுவதும் கருகியது போல் ஆனதாக கூறி உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் குயின் ஹில் பகுதியை சேர்ந்தவர் கவிதா எனும் இளம் பெண் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக அவரது உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது போல் கருமையாக மாறிவிட்டது. இதனால் கவிதாவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் கவிதாவின் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் பணம் கோரியுள்ளனர்.

ஆனால் அவர்கள் கோரிய பணத்தை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மருத்துவமனை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் வட்டாட்சியர் ஜான் மனோகரன் விரைந்து வந்து இரு தரப்புக்கும் சமாதானம் செய்து வைத்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...