இணையத்தில் ரெமோ…..இது ஈழத்தமிழர்களின் வேலையல்ல… இந்தியத் தமிழர்களின் வேலை…! – சேரன் ஐயா..!

Share this post:

sivaa

அண்மையில் ஈழத் தமிழர்கள் மீது தென்னிந்திய திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பழி சுமத்தியது யாவரும் அறிந்ததே.

திரைப்பட இயக்குநரும் நடிகருமான சேரன் கூறியது யாதெனில்,

தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது.. ஆனா அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான் என்று அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க.

இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம்.. எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது என்றார் சேரன்.

ஆனால் இன்று இந்தியாவில் வெளிவந்த ரெமோ இன்றைய நாளிலேயே இணையத்தில் வெளிவந்து விட்டது.

புலம்பெயர் நாடுகளில் இன்னமும் வெளிவராத ரெமோ எவ்வாறு இன்று இணையத்தளத்தில் வெளிவந்தது….?

ஆக, திருட்டு விசிடியும் , இணையத்தில் பதிவேற்றுவதும் இந்தியாவிலேயே இந்தியத் தமிழர்களாலேயே நடக்கின்றது என்பதனை அறிந்துகொள்ளுங்கள்.

இந்த விடயத்தை தொடர்புபடுத்தி ஈழத் தமிழர்களை நினைக்கையில் அருவருப்பாக இருக்கின்றது எனக் கூறியவர்கள் தத்தம் மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வைக்கப்போகிறார்கள்.

புலம்பெயர் நாடுகளிலே தான் இந்தியத் திரைப்படங்களை வாங்கி வசூலை குவிக்கின்றனர். ஆனாலும் புலம்பெயர் நாட்டு ஈழத் தமிழர்களை குறைகூறிவருகின்றனர்.

வந்தது ரெமோ…… அருவருப்பாக இல்லையா…?

Share This:
Loading...

Recent Posts

Loading...