பல் ஜோதிடம் தெரியுமா உங்களுக்கு?… வாங்க தெரிஞ்சிக்கலாம்..! – உங்கள் பற்களை வைத்து உங்களை அறிந்து கொள்ளுங்கள்…!

Share this post:

pal

புன்னகைமிக்க முகம் ஒருவரின் அழகை மேலும் அதிகரித்துக் காட்டும். சிலருக்கு பற்களின் இடையே இடைவெளி இருப்பதால், அதை அசிங்கமாக எண்ணுவார்கள். மேலும் அதை சரிசெய்ய சிகிச்சைகளையும் மேற்கொள்வார்கள்.

ஆனால் அத்தகையவர்களுக்கு ஓர் நற்செய்தி. அது என்னவெனில் பல் ஜோதிடப் படி, பற்களின் இடையே இடைவெளி இருந்தால், அது மிகவும் அதிர்ஷ்டமாம். மேலும் அப்படிப்பட்ட பற்களைக் கொண்டவர்கள் துணிச்சல்மிக்கவர்கள்.

இதுபோன்று ஏராளமான நல்ல குணங்கள் பற்களி ன் இடையே இடைவெளிகொண்டவர்களிடம் இரு க்கும். இங்கு பற்களின் இடையே உள்ள இடை வெளி எதைக்குறிக்கிறது என்று கொடுக்கப்பட் டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

அதிர்ஷ்டக்காரர்கள்

நிறைய மக்களுக்குபற்களின்இடையே இடைவெளிஇருந்தால் பிடிக்காது. ஆனால் அது அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் ஒன்று என்பது தெரியுமா? நீங்கள் பற்களின் இடையே உள்ள இடைவெளியை பல் மருத்துவ ரைக் கொண்டு சரிசெய்ய விரும்பினால், உங்களை த் தேடி வரும் அதிர்ஷ்டத்தை குப்பைத் தொட்டி யில் தூக்கி எறிகிறீர்கள் என்றர்த்தம்.

நம்பிக்கை மற்றும் தைரியம்

முன்பற்களுக்கு இடையே இடைவெளி இருந்தால், நீங்கள் நம்பிக்கையானவர்கள் மற்றும் மிகுந்த தைரியத்தைக் கொண்டவர்கள் என்பதைக் குறிக் கும். சொல்லப்போனால் உங்களுக்கு ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல். மற்றவர்களால் முடியாத எந்த ஒரு கஷ்டமான காரியத்தையும் தைரியத்துடன் மேற்கொள்வீர்கள்.

எதிலும் வெற்றி

பற்களுக்கு இடையே இடைவெளி உள்ளவர்கள், எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி அடையாமல் ஓயமாட் டார்கள். அந்த அளவில் இவர்கள் வெற்றியை ருசி காண விரும்புபவர்கள். அவர்களின் முயற்சிக்கு ஏற்ப வெற்றியும் அவர்களுக்கே வந்து சேரும்.

புத்திசாலி

முன்பற்களிடையே இடைவெளி இருப்பவர்கள் மிகவும் புத்திசாலி மற்றும் கற்பனைவளமிக்கவர்கள். மேலும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருப்பார்கள்.

சிறந்த பேச்சாளர்

இம்மாதிரியான பற்களைக்கொண்டவர்கள் எப்போதும் பேசிக்கொண்டேஇருப்பார்கள். நாள் முழுவதும் பேச சொன்னாலும் சற் றும் தளராமல் பேசுவார்கள். இந்த பேச்சாற்றலை அவர்களது அலுவலகத்தில் காண்பித்தால், வாழ்க் கையில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

நல்ல நிதி மேலாளர்

பற்களுக்கு இடையே இடைவெளி உள்ளவர் கள், நிதி பிரச்சனைகளை பயனுள்ள முறை யில்சமாளிப்பார்கள். இவர்களிடையே நல்ல சேமிப்பு பழக்கம் இருப்பதால், நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக கையாள்வார்கள்.

Share This:
Loading...

Recent Posts

Loading...