விளையாட்டாக கடித்த 3வயது சிறுவனை கொடூரமாக கொன்ற மாமன் …!

Share this post:

mu

மூன்று வயது சிறுவன் விளையாட்டாக அடித்ததால் அந்த சிறுவனை தாய்மாமன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை கொடூரமாக கொன்ற தாய்மாமனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அழிஞ்சிவாக்கத்தை சேர்ந்தவர் முருகன். இவருக்கு ஹேமந்த் என்ற 3 வயது மகன் உள்ளார். நேற்றிரவு வீட்டில் ஹேமந்த் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்த சிறுவனை காணவில்லை . இதனால் குடும்பத்தினர் சிறுவனை பல இடங்களில் தேடினர். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஹேமந்த் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து ஹேமந்த்தின் குடும்பத்தினர் கதறி அழுதனர் .

இதுதொடர்பாக பெரியபாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதிச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. முருகனின் மனைவி ஹேமலா. இவரது சித்தி மகன் தமிழ்செல்வன். எம்.ஏ பட்டதாரி. வேலை இல்லாமல் ஊரைச்சுற்றி கொண்டு இருந்துள்ளார். அப்போது கடந்த வாரத்தில் ஹேமந்த்துவுடன் தமிழ்செல்வன் விளையாடிய போது ஹேமந்த் விளையாட்டாக அவரை கடித்து விட்டார்.

அப்போது ஆத்திரத்தில் தமிழ்செல்வன், ஹேமந்த்தை கொலை செய்வதாக கூறியுள்ளார். அதையாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதுபோல ஹேமந்த்துவுடன் விளையாடிய போது தமிழ்செல்வனின் கன்னத்திலும் ஹேமந்த் அறைந்துள்ளார். இதுவும் ஹேமந்த் மீது தமிழ்செல்வனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குப் பழிவாங்க நேற்றிரவு ஹேமந்த் தூங்கி கொண்டு இருந்தபோது அவரை யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து தூக்கி கொண்டு கழிவுநீர் தொட்டி அருகே சென்றுள்ளார்.

அங்கு கை, கால்களை கட்டியதோடு ஹேமந்த்தின் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் அந்த சிறுவன் துடிதுடித்து உயிரிழந்தார். அந்த சிறுவனை கொலை செய்த அவரது தாய்மாமன் தமிழ் செலவனை போலீசார் கைது செய்தனர். விளையாட்டாக அடித்து விளையாடிய சிறுவனை தாய்மாமனே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...