பெண் உட்பட மூன்று பேரை கொலை செய்த நபர் – நடந்தது என்ன..?

Share this post:

arre

பெண் உட்பட மூன்று நபர்களை வெவ்வேறு இடங்களில் கொலை செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பலங்கொடை மாதம்பே என்ற இடத்தை சேர்ந்த சுமுது பிரியங்கர டி சில்வா என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி ஊரகஹா பிரதேசத்தில் 45 வயதான நபரை இவர் கொலை செய்துள்ளார். இதனையடுத்து ஜூலை மாதம் 18ஆம் திகதி அம்பாலங்கொடை பிரதேசத்தில் 49 வயதான வர்த்தகரை இந்த நபர் கொன்றுள்ளார்.

இதனையடுத்து வெலிபென்ன என்ற பிரதேசத்தில் 37 வயதான பெண்ணை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவற்றை தவிர, மேலும் மூன்று பேர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து அவர்களுக்கு காயத்தை ஏற்படுத்தியதாகவும் சந்தேக நபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...