முதல்வர் ஜெயலலிதாவை கொலை செய்ய மருத்துவமனையில் சதி..! வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்…! (Video)

Share this post:

jeya

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ஆம் திகதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான சிகிச்சை தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து உண்மையான விளக்கத்தை அரசு தரப்பு விளக்க வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் இந்த தகவலை கூறியுள்ள நிலையில், குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில் ஜெயலலிதாவை கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்ய சசிகலா முயல்வதாகவும், அதற்கு அப்பல்லோ நிறுவனமும் துணை போவதாகவும் கூறியுள்ளார்.

சிறந்த மருத்துவர்கள் பலர் இருக்க, சசிகலா தரப்பு தனது குடும்ப மருத்துவர்களை வைத்தே ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வருகிறது என்றும் அவர் பரபரப்பு முறைப்பாடுகளை கூறியுள்ளார்.

இதேவேளை, டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...