தாயை 2 மாதம் கோவில்பக்கம் செல்ல விடாமல் தடுத்த யாழ் இளைஞன்!! எதுக்காக தெரியுமா…?

Share this post:

kojil

தாயை 2 மாதம் கோவில்பக்கம் செல்ல விடாமல் தடுத்த யாழ் இளைஞன்!! எதுக்காக? அவனுக்கு என்ன ரிசல்ட் ? இவனுக்கு என்ன ரிசல்ட் ? அவர்ட்ட பிள்ளைக்கு என்ன ரிசல்ட் ? வேற யார் இந்த முறை எழுதினது ? அவன் அடுத்த #வருஷம் தானே எழுதறான் ? போன்ற கேள்விகளை காவிக்கொண்டு ஒரு கூட்டம் இன்றைக்கு ஓடி திரியுது.

இந்த கூட்டம் காலங்காத்தாலையே எழும்பி ஓடி திரியுது. தூர இடத்தில் உள்ளவங்களுக்கு காலங்காத்தல போன போட்டு கேட்குதுகள்.

ஆமாம் மற்றவனின் ரிசல்ட்ட தெரிந்து இவனுங்க என்ன பண்ண போறாங்க என்று பார்த்தால் , இன்றைக்கு எவன்எவனுக்கு , என்ன ரிசல்ட் என்று ஓடி ஓடி தகவல் சேர்த்து விட்டு ,நாளைக்கு கூடி கூடி என்ன கதைப்பாங்க என்றால் , அவன் விட்டுட்டான் , இவன் பாஸாகிட்டான் , அவட்ட பிள்ளை விட்டுட்டு , இவட்ட பிள்ளை பாஸாகிட்டு , எத்தனை ரியூசனுக்கு ஏற்றி இறக்கினவர் அவர பிள்ளை படிக்கலை , அதுக்கு படிக்கிற சிந்தனை இருந்தால் தானே, அப்படின்னு கதைச்சுட்டு திரிவாங்க ,

இதெல்லாத்தையும் விட கொடுமை என்ன என்றால் பாஸ் ஆகாத பிள்ளைகளின் பெற்றோர்கள் அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்கு கோயில் , #மங்கள , அமங்கள , வீடுகள் , விசேஷங்கள் என்று எங்கும் செல்ல முடியாது..

சென்றால் பிள்ளை பாஸ் பண்ணாததுக்கு ஆறுதல் சொல்லுறேன் எனும் பெயரில் வதைச்சு அவங்கள அழ வைச்சுடுவாங்க ..

என் #அம்மா எல்லாம் என்னால கோயிலுக்கு போகாமல் விட்ட காலம் உண்டு. நான் ஸ்கொலர்சிப் , O/L மற்றும் A/L எழுதி ரிசல்ட் வந்த காலத்தில் கோயில் பக்கம் போறதில்லை. அப்படி அவா போக வெளிக்கிட்டாலும் நான் போக விட மாட்டேன். ஏனெனில் ஊரில் உள்ளவன் எல்லாம் கோயில அம்மாவை வைச்சு, வதைச்ச வதைக்கு எல்லாம் பிறகு வீட்டில நான் தான் வாங்கி கட்டனும்.

அதனால #கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், நீங்க வீட்ட இருந்து கும்பிடுங்க என்று இரண்டு மாதங்களுக்கு கோயில் பக்கம் போக விடாமல் மறிச்சுடுவேன்.

எனக்கு ரிசல்ட் வந்தால் இரண்டு மாதங்களுக்கு அம்மா, கோயில், குளம், சொந்தம், பந்தம், என எங்கும் செல்ல கூடாது என்பது எனது கண்டிப்பான உத்தரவு.

என் உத்தரவை மீறி போனால், அங்க அவா சொன்னா , இவா சொன்னா , என்று வீட்டில வந்து எதுவும் கதைக்க கூடாது என்று கண்டிப்பான உத்தரவு.

நான் நல்ல ரிசல்ட் எடுக்காததற்கு தண்டனை, அவமானம் எல்லாம் அம்மாவுக்கு,
நான் ஒழுங்கா நல்ல பையனா இருக்காதற்கு , ” தவத்திற்கு பிள்ளை வளர்க்க தெரியாது” என அம்மா மீதே பழி.

இதெல்லாம் பார்த்தால் சில வேளை கண்ணு வேர்க்கும், நானும் நினைப்பேன் அடுத்த எக்ஸாமில நல்ல ரிசல்ட் எடுக்க வேண்டும் என்று..அதெல்லாம் நினைப்பு மட்டும் தான்.

ஆனா ஒன்று நான் நல்ல படிச்சு இருந்தால் , இப்ப நான் இருப்பது போன்று சந்தோசமா, பிடிச்ச துறையில், இப்ப வாழுற வாழ்க்கை, வாழ்ந்திருப்பேனோ, தெரியாது.

யோகர் சுவாமி சொன்னது போன்று , எப்பவோ முடிந்த காரியம்.

நன்றி
முகப்புத்தகம்

Share This:
Loading...

Related Posts

Loading...