எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் – ரகசியம் சொல்லும் அம்பானி….

Share this post:

ammm

கொளு கொளுவென குண்டுபூசணிக்காய் போன்று இருந்த, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, எவ்வாறு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான ஆண்மகனாக மாறினார் என்ற சந்தேகம் அனைத்து ஆண் மகன்களின் மனதிலும் தோன்றியிருக்கும்.

ஆனந்த் அம்பானிக்கு ஏற்பட்ட ஆஸ்துமா பிரச்சனை காரணமாக, அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டதன் காரணமாக அவரது உடல் பருமன் அதிகரித்து 108 கிலோ எடை அதிகரித்தார்.

இவர் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, அனைவரும் இவருக்கு என்ன நடந்து? ஏன் இப்படி ஆகிவிட்டார்? என்ற கேள்விக்கணைகளை தொடுத்தனர். ஆனால், இந்த கேள்விகளை கேட்டவர்கள் எல்லாம் வாயில் விரல் வைக்கும் விதமாக இவர் 108 எடையில் இருந்து 80 கிலோவாக குறைத்துள்ளார்.

அதற்கு காரணம், இவரது பிட்னஸ், எப்படி இருந்த ஆனந்த் அம்பானி இப்படி ஆகிவிட்டாரே என்ற வசனத்துடன் கூடிய இவரது புகைப்படங்கள் உலாவந்தன. Vinod Channa என்பவரே இவரது பிட்னஸ் பயிற்சியாளர், இவர் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

ஆனந்த் அம்பானி உடல் எடை குறைத்ததன் ரகசியம் குறித்து இவர் கூறியதாவது, ஒரு நாளைக்கு 3 அல்லது 5 மணி நேரம் பயிற்சி செய்வார். இயற்கையான முறையிலேயே அவரது உடல் எடை குறைக்கப்பட்டது.

21 கிலோ மீற்றர் நடைபயிற்சி, யோகா, கார்டியோ பயிற்சிகள், கார்போஹைட்ரேட் குறைவான உணவுகள், போதுமான கொழுப்பு உணவுகள் மற்றும் தேவையான அளவும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டார். 18 மாதங்களில் இயற்கையான வழியிலேயே இவர் உடல் எடையை குறைத்துள்ளார் என கூறியுள்ளார்.

– See more at: http://www.manithan.com/news/20160929121830#sthash.gnyvAOk2.dpuf

Share This:
Loading...

Recent Posts

Loading...