மூன்று மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்…!

Share this post:

fdg

மத்திய பிரதேச மாநிலம் ரெய்சன் மாவட்டத்தில் தொடக்க பள்ளியில் படிக்கும் மூன்று சிறுமிகளை அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரெய்சன் மாவட்டம், பகோரியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வந்த மூன்று மாணவிகளை, அப்பள்ளியில் பணிபுரியும் 40 வயதான துளசிராம் என்பவர் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

பலாத்காரம் செய்யப்பட்ட இரண்டு மாணவிகளுக்கு 9 வயது மற்றும் ஒருவருக்கு 11 வயது ஆகும். இந்த மாணவிகளை கடந்த ஒரு மாத காலமாக மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார் ஆசிரியர் துளசிராம்.

ஆசிரியரின் இந் வக்கிர செயலை அறிந்த சிறுமியின் பெற்றோர் அவர் மீது தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். ஆசிரியர் துளசிராம் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ஆசிரியரை பதவி நீக்கம் செய்வதாக மாவட்ட தலைமை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்

Share This:
Loading...

Related Posts

Loading...