இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையுமா படித்து தெரிந்து கொள்ளுங்கள் – இன்றைய ராசி பலன்கள் 06. 10. 2016

Share this post:

rasipalan

மேஷம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

ரிஷபம்

பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

மிதுனம்

சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

கடகம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

சிம்மம்

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

கன்னி

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

துலாம்

கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

விருச்சிகம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

தனுசு

குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

மகரம்

குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

கும்பம்

தவறு செய்தவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

மீனம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

Share This:
Loading...

Related Posts

Loading...