ஒருதலைக்காதலால் ஓரு குடும்பமே அடியோடு அழிந்த சோகம்..! நடந்தது என்ன..?

Share this post:

yaa

ஆசிட் வீச்சில் பலியான மகள், அதனால் தற்கொலை செய்து கொண்ட தாய். இருவரின் பிரிவால் உடல்நலமுற்று தற்போது மரணமடைந்துள்ள தந்தை என ஒரு தலை காதலுக்கு மொத்த குடும்பமும் பலியாகியிருக்கும் நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைகாலை சேர்ந்தவர் ஜெயபால் (50) இவர் மனைவி சரஸ்வதி மற்றும் இவர்களது ஒரே மகள் வினோதினி. வினோதினி சென்னையில் உள்ள ஒரு மென் பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2012 ஆம் வருடம் தீபாவளி பண்டிகையை தன் சொந்த ஊரான புதுச்சேரியில் கொண்டாடிய வினோதினி சென்னை திரும்ப பேருந்து நிலையத்தில் தன் தந்தையுடன் காத்திருந்தார்.

அப்போது வினோதினியை ஒரு தலையாக காதலித்து வந்த சுரேஷ் என்னும் இளைஞன் அங்கு ஆசிட் பாட்டிலுடன் வந்து வினோதினி முகத்தில் வீசியுள்ளான். இதில் முகம் வெந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலையாளி சுரேஷ் ஆயுள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறான். மகள் இறந்த துக்கம் தாளாமல் வினோதியின் தாய் சரஸ்வதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி, மகள் என இருவரையும் இழந்த ஜெயபால் நடை பிணமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் குடி பழக்கத்துக்கும் அடிமையாகியுள்ளாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு வீடு வந்து தூங்கியவர் அடுத்த நாள் வெகு நேரமாகியும் எழவில்லை.

உடனே ஜெயபாலின் மைத்துனர் சக்திவேல் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஜெயபால் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பொலிசாருக்கு தகவல் செல்ல அவர்கள் சடலத்தை கைபற்றி பிரேதபரிசோதனை செய்து அவர் உறவினர்களிடம் ஜெயபால் சடலத்தை ஒப்படைத்தனர்.

ஆயுள் தண்டணை பெற்று சிறையில் உள்ள சுரேஷ் தீர்ப்பு வெளியான அன்று தண்டணை குறைக்க கோரி நீதிமன்றத்தை நாட இருப்பதாக சொன்னது குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...