நயன்தாராவை கழட்டி விட்டு ஹன்சிகாவை பிடித்த நயன்தாரா காதலன்…!

Share this post:

na

சின்ன குஷ்பு என்ற டைட்டிலுடன் கோலிவுட்டுக்குள் நுழைந்தவர் ஹன்சிகா. அவரது வளர்ச்சியும் ஆச்சர்யப்படும் அளவுக்கு உயர்ந்தது. விஜய் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் அடுத்தடுத்து ஜோடி போட்டு சக ஹீரோயின்களுக்கு வயிற்றில் புளியை கரைத்தார்.

திடீரென்று அவரது மார்க்கெட் நிலவரம் டல்லடிக்கத் தொடங்கியது. இதற்கான காரணம் புரியாமல் திணறி கொண்டிருக்கிறாராம். ஆரம்ப கட்டத்தில் ரசிகர்களிடம் காட்டிய வெளிப்படையான அணுகுமுறையை அவர் தொடராமல் திடீரென்று தனது ஈடுபாட்டை குறைத்து கொண்டதும் இதற்கொரு காரணமாக கூறப்படுகிறது.

சவாலான கதாபாத்திரங்கள் எதுவும் அமையாததும் மற்றொரு காரணம். ஜெயம் ரவியுடன் போகன் படத்தில் மட்டுமே நடிக்கிறார் ஹன்சிகா. அதன் படப்பிடிப்பும் முடிந்த நிலையில் கைவசம் வேறு படங்கள் எதுவும் இல்லை. தெலுங்கிலும் இதே நிலை தானாம். போகன் படம் வெளியான பிறகுதான் அவரது மார்க்கெட் நிலவரம் எந்தளவுக்கு உயரும் என்று தெரியும்.

கோலிவுட்டில் சத்தமில்லாமலிருக்கும் ஹன்சிகாவுக்கு உதவும் வகையில் அவரை மீண்டும் புது உற்சாகத்துடன் அழைத்து வரவுள்ளார் நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன்.

அடுத்து சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் சூர்யா ஜோடியாக ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். மற்றொரு நாயகியாக ஹன்சிகாவை நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது.

சிங்கம் 2ம் பாகத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கிறார். இப்படம் மூலம் அவருடன் 2வது முறையாக ஜோடி சேர உள்ளார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...