கொட்டனால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்த கொடூரம்.. – வெளியான அதிர்ச்சி வீடியோ..!

Share this post:

ar

அம்பலாங்கொட – இடம்தொட்ட பிரதேசத்தில் தடியினால் தாக்கி நபரொருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை கலகொட பிரதேசத்தில் வைத்து அம்பலங்கொட காவற்துறையினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், இன்று பலபிட்டி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அம்பலாங்கொட, இடம்தொட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட முறுகலின் போது நபரொருவர் தடியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அருகில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், தாக்குதலுக்கு உள்ளான நபர், கராபிட்டி போதான மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று உயிரிழந்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...