பணம் கொடுக்க மறுத்த பெற்றோர் – தந்தையின் மண்டையை பிளந்த மகன்..! யாழில் சம்பவம் ..!!!

Share this post:

ma

யாழ்ப்பாணம், கே.கே.எஸ் வீதியில் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றது. தனது தேவைக்கென பெற்றோரிடம் ஒரு இலட்சம் ருபாவை மகன் கேட்டுள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக தந்தை பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற மகன் தாய் தந்தையை கடுமையாக தாக்கியுள்ளார்.

குறித்த தாக்குதலையடுத்து மற்றொரு மகன் பொலிஸாரிற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலையடுத்து பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளனர். எனினும் தனது மகன் மீது முறைப்பாடு செய்ய தாயார் மறுத்துள்ளார். இதனால் மகனை கைது செய்ய முடியாமல் பொலிசார் திரும்பிச் சென்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...