திருமணத்திற்கு வாங்கிய மோதிரத்தை அந்தரங்க உறுப்பில் மாட்டி பரிதவித்த மாப்பிள்ளை…! – நடந்தது என்ன..?

Share this post:

dsa

காதலுக்காக, திருமணத்திற்காக புதுமையாக எதையெதையோ செய்து நாம் பார்த்திருப்போம். நடக்காதவை கூட கற்பனையில் திரையில் படமாக பார்த்திருப்போம்.

ஆனால், சீனாவை சேர்ந்த புது மாப்பிளை ஒருவர், தன் வருங்கால துணையில் விரலில் மாட்ட வேண்டிய மோதிரத்தை ஆண்குறியில் மாட்டி வைத்திருந்து, செம்மையாக மாட்டிகொண்டார்.

தனது புது மனைவியின் விரலில் மாட்ட வேண்டிய மோதிரத்தை, தனது ஆண் குறியில் பத்திரமாக மாட்டி வைத்திருந்த 18 வயதே ஆன சீன ஆண் பரிதாபமான நிலையில் இருக்கிறார். இவர் மாட்டி வைத்த மோதிரம், வசமாக ஆண் குறியில் மாட்டிக்கொள்ள, அதை எப்படி வெளியே கூறுவது என தெரியாமல், பரிதவித்துள்ளார்.

இரண்டு நாட்களாக பொறுத்த சீன மாப்பிளையால் வலி மற்றும் வீக்கத்தை பொறுக்க முடியவில்லை. தாளாத வலி காரணமாக பயந்து வெளியே கூறிவிட்டார். பிறகு தீயணைப்பு படை வீரர்கள், மருத்துவர்கள் உட்பட அனைவரும் இவரை பத்திரமாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

மருத்துவர்களால் இதை எப்படி அகற்றுவது என தெரியாமல் குழம்பி போய் நிற்க. தீயணைப்பு படை வீரர்கள் உதவியோடு கடந்த செப்டம்பர் அன்று இவரது ஆண்குறியில் இருந்து மோதிரத்தை அகற்றினர்.

வீக்கத்தை குறைக்க முதலில் தீயணைப்பு படை வீரர்கள் சீன மாப்பிளையின் ஆண்குறி பகுதியில் ஐஸ் பேக் வைத்தனர். இதனால், வீக்கம் குறைந்தது. சற்றே சங்கடமான இந்த வேலையை தீயணைப்பு படை வீரர்கள் 90 நிமிட போராட்டத்திற்கு பிறகு மோதிரத்தை ஆண்குறியில் இருந்து அகற்றினர்.

இந்த சமூக ஊடக உலகத்தில் எதையும் மறைக்க முடியாது என்பதால். இவருக்கு நடந்த அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து யாரோ ஒருவர் சீன மொபைல் சமூக தளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டார். Weibo எனம் அந்த தளம் Twitter போன்று செயலபடும் தளம் என அறியப்படுகிறது.

சிகிச்சை துவங்கியதில் இருந்து, முடியும் வரை தனது முகத்தை மூடியப்படியே இருந்தார் அந்த சீன மாப்பிள்ளை. இவ்வளவு களேபரம் ஏற்படுத்திய இந்த நபரின் விபரங்கள் மட்டும் எந்த தளத்திலும் கிடைக்கவில்லை.

இந்த வீடியோ பதிவை சிரித்து, சிரித்து ஷேர்செய்யும் சீனர்கள், இப்படி முட்டாள்தனமாய் யாரேனும் செய்வார்களா என்பது போல தான் கருத்து தெரிவித்துள்ளனர்.

எது எப்படியோ, இவரது திருமணம் நினைவில் இருக்கிறதோ இல்லையோ, இந்த சம்பவத்தை இணைய வரலாற்றில் இருந்து அகற்றுவது மிக மிக கடினம்.

Share This:
Loading...

Related Posts

Loading...