7ம் திகதி வெளியாகவுள்ளே ரெமோ , றெக்க , தேவி திரைப்படங்கள் எத்தனை தியேட்டரில் வெளியாகப் போகுது என தெரியுமா..? வசூல் வேட்டை நடத்தப் போவது யார்..?

Share this post:

ss

சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த வருட ஆயுதபூஜைதான் அவர்களுக்கு தீபாவளி. ஆயுதபூஜையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை அன்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ, விஜய்சேதுபதி நடித்துள்ள றெக்க, பிரபுதேவா, தமன்னா நடித்த டெவில் ஹிந்திப்படத்தின் தமிழ்பதிப்பான தேவி ஆகிய மூன்று படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன.

இந்த மூன்று படங்களில் ரெமோ, றெக்க இரண்டு படங்களுக்குமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக, சிவகார்த்திகேயனின் ரெமோ படத்திற்கு அதிகபட்ச எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.காரணம், இந்தப் படத்தில் பெண் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதுதான்.

அதோடு, அனிருத்தின் இசை, பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பது, பிரம்மாண்டமான புரமோஷன் என ரெமோ பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட வருகிறது.

இதனால், ரெமோ படத்திற்கு மட்டுமே தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் கிட்டத்தட்ட 30% தியேட்டர்கள் புக் பண்ணப்பட்டுள்ளதாக தகவல்.தமிழகத்தில் மொத்தமுள்ள சுமார் 1050 தியேட்டர்களில் ரெமோவுக்காக மட்டுமே 325க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம். றெக்க படம்300க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

தேவி படத்தை நேரடி தமிழ்ப்படம் என்று விளம்பரம் செய்தாலும் தியேட்டர்காரர்களுக்கு அது டப்பிங் படம் என்று தெரியும் என்பதால் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லையாம்.இதுவரை சுமார் 125 தியேட்டகள் மட்டுமே புக் பண்ணி உள்ளனர்.மேலும் 25 தியேட்டர்கள் கிடைத்தால்தான் திட்டமிட்ட தேதியில் தேவி படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.150 தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றால் ஒருவாரம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது என்பதே லேட்டஸ்ட் நிலவரம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...