வீதிகளில் தேங்கியுள்ள நீரில் குளித்த பெண்கள்..!! காரணம் என்ன..? (Photos)

Share this post:

தாய்லாந்தில் சீரற்ற நிலையிலுள்ள வீதிகள் குறித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக பெண்கள் சிலர் வீதிகளில் ஏற்பட்டுள்ள குழிகளில் தேங்கிக் கிடக்கும் நீரில் குளியலில் ஈடுபட்டுள்ளனர்.

பேங்கொக் நகரில் வசிக்கும் ‘பாம்’ எனும் மொடல் தாய்லாந்தின் டாக் மாகாணத்திலுள்ள மாயி ரமாத் நகரிலுள்ள தனது உறவினர்களைப் பார்க்கச் சென்றபோது வீதிகளில் உள்ள குழிகளைக் கண்டு பெரும் அதிருப்தியடைந்தார்.

இவ் வீதிகளின் நிலை தொடர்பில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அவர் தேங்கிக்கிடக்கும் நீரில் குளியலில் ஈடுபட்டார்.

அதையடுத்து, வடகிழக்கு தாய்லாந்திலுள்ள கோன் கயென் மாகாணத் திலுள்ள வயோதிபப் பெண்கள் சிலரும் இத்தகைய குளியலில் ஈடு பட்டனர்.

இவ் வீதிகள் 30 வருட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் உள்ளன என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

road

girl-1

girl02

Share This:
Loading...

Related Posts

Loading...