சுவிட்ஸர்லாந்தில் உங்கள் உறவினர்கள் வாழ்கின்றார்களா??? – உங்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி…!

Share this post:

ss

சுவிட்ஸர்லாந்து நீதி அமைச்சர் சிமோனிட்டா சொமருகா அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்த விஜயத்தில், புகலிடம்கோரி அந்த நாட்டிற்கு சென்றுள்ள இலங்கையர்களை மீண்டும் திருப்பி அனுப்பவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையர்களின் புகலிடக்கோரிக்கையினை நிராகரித்து, மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பவது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வினை வலுப்படுத்தி கைச்சாதிடுவதற்கு சுவிட்ஸர்லாந்து நீதி அமைச்சர் எதிர்பார்த்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் புகலிடக் கோரிக்கை வழங்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவது தொடர்பில் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் விமர்சனத்திற்குள்ளாகியது.

சுவிட்ஸர்லாந்திலிருந்து நாட்டுக்குத் திருப்பி அனுப்படும் இலங்கையர்கள் சிலர் விடுதலைப் புலிகள் அமைப்பினருடன் தொடர்புகளை பேணியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, சித்திரைவதைக்குள்ளாக்கப்படுவார்கள் என மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் சுவிட்ஸர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிகார அமைச்சர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் தமிழ் பிரஜைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.

இலங்கையில் உயிராபத்து என சுவிட்ஸர்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்தவர்களில் 42 வீதமான தனி நபர்கள் மற்றும் குடும்பங்கள் அரச வருமானத்தில் வசித்து வரும் நிலையில் அவை அதிகமான செலவாக சுவிட்சலாந்திற்கு உள்ளதாம் அதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள சுமுகமான நிலையினை கருத்தில் எடுத்து ஒரு தொகை பணத்தினைக் கொடுத்து இலங்கைக்கு அனுப்புவதில் இலங்கையுடன் முழுமையான உடன்பாடு காணப்பட்டுள்ளதாம் அதற்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது….

சுமார் 50,000 இலங்கையர்கள் சுவிசுவிட்ஸர்லாந்தில் வசித்து வருவதுடன்,இவர்களில் பலர் கடந்த கால யுத்தத்தின் காரணமாக புகலிடம்கோரிச் சென்ற தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...