மார்புப் பகுதியில் வைத்து மறைத்து 30 இலட்ச தங்கத்துடன் வந்த பெண் சிக்கினார்…!

Share this post:

au

30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய பெருந்தொகை தங்கத்துடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இன்று காலை துபாயில் இருந்து வந்த விமானத்தில் நாட்டை வந்தடைந்ததாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர் 60 வயதான பெண் என தெரியவந்துள்ளது.

மேலும் இவர் தனது நெஞ்சுப் பகுதியில் மிகவும் சூட்சமமான முறையில் இந்த தங்கத்தை மறைத்து நாட்டுக்கு கடத்தி வந்துள்ளார்.

இந்தநிலையில், விமான நிலைய அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...