நோயாளியை பார்க்க தாமதமாக வந்த வைத்தியர் சரமாரித் தாக்குதல் நடத்திய நோயாளியின் உறவினர்கள்..! எங்க தெரியுமா..?

Share this post:

noy

நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்த சிலர் வைத்தியர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவமொன்று நேற்று (01) இரவு திருகோணமலைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியர் தனது உத்தியோகபுர்வ இல்லத்திலிருந்து வருகை தர ஏற்பட்ட தாமதமே தாக்குதல் நடாத்த காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை பதவிய, ஸ்ரீ புற பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியர் மீது இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான வைத்தியர் வைத்தியசாலையை மூடிவிட்டு சிகிச்சைக்காக திருகோணமலை பெரியாஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.

இச்சம்பவத்தினால், வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கும் வெளியில் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

Share This:
Loading...

Related Posts

Loading...