மாமனாரால் மருமகன் பரிதாபமாக வெட்டிக் கொலை..! காரணம் என்ன..?

Share this post:

maaaa

மருமகனை கத்தியால் வெட்டி கொலை செய்யததாக மாமனாரை பொலிசார் கைது செய்துள்ளனர். காலி – நெலுவ அமல்வத்தை தோட்ட பகுதியில் குறித்த கொலை சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மாமனார் மருமனனுக்கிடையில் இடம்பெற்ற குடும்ப தகராறு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சந்தேக நபரின் மூத்த மகளின் கணவர் அவரது பிள்ளைகளை பார்த்துகொள்வதற்காக இரண்டாவது மகளை அவரின் வீட்டில் தங்க வைத்துள்ளதாகவும் இதன் பின்னர் மூத்த மகளின் கணவருக்கும் இரண்டாவது மகளுக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, சந்தேகநபர் இரண்டாவது மகளை தமது வீட்டிற்கு அழைத்து வந்து தங்கவைத்துள்ளனர். பின்னர் மூத்த மகளின் கணவர் இரண்டாவது மகளை தேடி அவர்களது வீட்டிற்கு வந்துள்ளார் இதன் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் தெனியாய பல்லேகம பிரதேசத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 36 (வயது) வடிவேலு தியாகராஜா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 48 (வயது) கணபதி என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...