ஆண்களை மயக்கி ஆட்டையை போட்ட கில்லாடி பெண்…!

Share this post:

aa

கணவரின் உதவியுடன் கடந்த 7 வருடங்களாக ஆண்களுடன் நட்பாகி அவர்களை ஏமாற்றி, தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் இருக்கும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டு வந்த பெண்ணொருவரை மீரிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த பெண் முதலில் ஆண்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு பின்னர், அவர்களை தங்குமிட விடுதிகளுக்கு செல்ல அழைப்பு விடுத்துள்ளார். தங்குமிட விடுதிகளுக்கு அழைத்துச் செல்லும் ஆண்களுக்கு சக்தி மருந்து மாத்திரை எனக் கூறி மாத்திரைகளை கொடுத்துள்ளார்.

மாத்திரையை சாப்பிட்ட பின்னர் தமக்கு நித்திரை ஏற்பட்டதாக பெண்ணிடம் சிக்கிய ஆண்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

தமக்கு நித்திரை ஏற்பட்ட பின்னர், தம்மிடம் இருந்த பெறுமதியான பணம் உட்பட அனைத்தையும் கொள்ளையிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளார்.

நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இந்த பெண் ஆண் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் காணொளி, அங்குள்ள பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை நடத்தி பொலிஸார் மீரிகம ஹக்குருகும்புர பிரதேசத்தில் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். பெண்ணை கைது செய்யும் போது அவர் கொள்ளையிட்ட பல பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...