இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையுமா படித்து தெரிந்து கொள்ளுங்கள் – இன்றைய ராசி பலன்கள் 03. 10. 2016

Share this post:

rasipalan

மேஷம்

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

ரிஷபம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

மிதுனம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

கடகம்

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

சிம்மம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

கன்னி

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, களைப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்தப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

துலாம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். சின்ன சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

விருச்சிகம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

தனுசு

எந்த பிரச்னையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

மகரம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

கும்பம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிட்டும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

மீனம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

Share This:
Loading...

Related Posts

Loading...