காதல் மன்னனுக்கு போலீசார் வலைவீச்சு… நண்பிகள் சண்டை..

Share this post:

kaa

நண்பிகளான இரண்டு பெண்களை காதலித்து ஏமாற்றிய காதல் மன்னன், தனது புதிய காதலியுடன் வீட்டை விட்டு ஒடிய சம்பவம் எல்லப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல் இதுதான், 21 வயது இளைஞன், இரண்டு யுவதிகளை காதலித்து வந்துள்ளான். இந்த இரண்டு யுவதிகளும் நண்பிகளாக இருந்தாலும் அவர்கள் இருவரையும் சாமர்த்தியமாக ஏமாற்றி ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை காதலித்து வந்துள்ளான்.

நீண்ட காலமாக அரங்கேறிய இந்த காதல் விடயம் காலப்போக்கில் நண்பிகள் இருவருக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. அதனையடுத்து, அந்த இளைஞனிடம் நேரில் சென்று நியாயம் கேட்டிருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு… அந்த பெண்கள் அப்படி செய்யவில்லை. மாறாக, தமக்குள் குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சண்டை ஓய்ந்ததும், குறித்த இளைஞனிடம் நியாயம் கேட்பதற்காக அவரை சந்திக்க தோழிகள் இருவரும் முடிவுசெய்துள்ளனர். இவர்களது திட்டத்தை எப்படியோ தெரிந்துக்கொண்ட இளைஞன், மூன்றாவதாக காதலித்து வந்த தனது புதிய காதலியை கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளான். புதிய காதலி யாரென்று பார்த்தால் 14 வயதேயான பாடசாலை மாணவியாம். தனது மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர்,

எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதனையடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் போது, இளைஞனின் காதல் லீலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்துள்ளதுடன் இளைஞனையும் சிறுமியையும் தேடி வலைவிரித்துள்ளதாக எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எல்.டி.என்.கருணாரட்ன தெரிவித்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...