ஆபாச படம் எடுத்த பிரபல இயக்குனர் மற்றும் நடிகைகள் பொலிஸாரிடம் சிக்கினர்…(Video)

Share this post:

arr

ஆபாச படமொடுத்த குழுவொன்றினை இன்று வேயங்கொடை காவற்துறையினர் கைது செய்தனர்.

குறித்த ஆபாச படத்தை பார்த்த நபரொருவர் காவற்துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது நான்கு பேர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களுள் குறித்த படத்தின் இயக்குனரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களால் எடுக்கப்பட்ட இந்த ஆபாச படத்தின் DVD யின் சுமார் 6 ஆயிரம் பிரதிகள் தற்போதைய நிலையில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் , இது இணையத்தளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேயங்கொடை , கூரிகொடுவ பிரதேசத்தில் வாடகைக்கு பெறப்பட்ட வீடொன்றில் இந்த படப்பிடிப்பு இடம்பெற்றுள்ளது.

திரைப்படங்களுக்கு பயன்படுத்தப்படும் உயர் தொழிநுட்பம் இந்த ஆபாச படத்தை எடுப்பதற்கு பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் நற்பெயரை சம்பாதித்துள்ள G.S. பதிரண என்ற இயக்குனர் ஒருவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் நடித்த நடிகை வேயங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

அவர் சில தொலைக்காட்சி நாடகங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பட்ட நிலையில் எதிர்வரும் 5 ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share This:
Loading...

Recent Posts

Loading...