கோலூன்றிப் பாய்தலில் அகில இலங்கையில் யாழ் மாணவி அனித்தா புதிய சாதனை!!! (Photos)

Share this post:

இலங்கை 42 தேசிய தடகளப் போட்டி யாழ்.துரையப்பா விளட்டர்ங்கில் 29.09.2016 தொடக்கம் நடைபெற்றுவருகின்றது.

இப்போட்டியில் நேற்று(30.09.2016) நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவி மாணவி ஜெகதீஸ்வரன் அனித்தா 3.45 மீற்றர் உயரத்தை தாண்டி இலங்கை தேசியமட்ட சாதனையை தகர்த்தெறிந்தார்.

அண்மையில் நடைபெற்ற படைவீரர்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இராணுவ வீராங்கனையான கசிந்தா நிலுக்‌ஷி 3.40 மீற்றர் உயரத்தை தாண்டி நிலைநாட்டிய சாதனையையே அனித்தா முறியடித்தார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் நடைபெற்ற சேர் ஜோன் காபற் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் அனித்தாவினால் தேசியமட்டத்தில் 3.35 மீற்றர் என நிலைநாட்டப்பட்ட சாதனையையே குறித்த இராணுவ வீராங்கனை 3.40 மீற்றர் என சாதனை படைத்தார் என்பதும் அதனை அனித்தா மீண்டும் இப்போட்டியில் 3.45 மீற்றர் என முறியடித்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அனித்தா அவர்களுக்கும் பயிற்றுநர் சுபாஸ்கரன் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக!!!

aaa

2

3

Share This:
Loading...

Recent Posts

Loading...