அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கான நிதி 20இலட்சமாக அதிகரிப்பு!

Share this post:

s

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கையர்கள் மீண்டும் நாடுதிரும்பும்போது வழங்கப்படும் நிதித்தொகையானது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அறிவித்துள்ளது.

அடைக்கலம் கோரியுள்ள அகதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான இலங்கை அகதிகள் நவுறு மற்றும் மானுஸ் தீவுகளில் உள்ள அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அகதிகள் சுயவிருப்பத்தின்பேரில் நாடு திரும்பினால், இதுவரையில் வழங்கப்பட்டு வந்த 10 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்கள் எதிர்காலத்தில் 20ஆயிரம் டொலர்களாக வழங்கப்படும் என அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...