மாணவியின் தலைமுடியை பிடித்து கொடுமையாக தாக்கும் டியூசன் ஆசிரியர் – அதிர்ச்சி வீடியோ

Share this post:

s

இந்தியாவின் அரியானா மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் ஜெயின் தனது டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். இந்த சென்டரில் ,10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் படித்து வருகின்றனர். பங்கஜ் ஜெயின் இங்கு படிக்கும் மாணவர்களை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.

மேலும் அவர் மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து ஆட்டும்போது அங்கிருந்த ஒரு மாணவரால் இந்த சம்பவம் படம் பிடிக்கப்பட்டு சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு காரணம் பள்ளிக்கு தாமதமாக வந்ததா? அல்லது குறைந்த மதிப்பெண் வாங்கியதா? அல்லது வீட்டுப் பாடம் செய்யாததா? போன்ற விவரங்கள் எதுவும் தெரிய வரவில்லை.

ஆனால், இதுதொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வைரலானதை அடுத்து பங்கஜ் ஜெயினை போலீஸார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...