நேற்று இரவு பெண் ஒருவருக்கு ஏற்பட்ட அவல நிலைமை!! 4 பேர் மீது காவற்துறை வலைவீச்சு…!

Share this post:

ava

மதுகம – வெலிபென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இரு உந்துருளிகளில் நேற்று இரவு வந்துள்ள 4 நபர்களினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெலிபென்ன காவற்துறை தெரிவித்தது.

37 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும், இதன்போது காயமடைந்துள்ள நபர் ஒருவர் மற்றும் இரு சிறிய குழந்தைகள் நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதாள உலக குழுவினருடனான கருத்து முரண்பாடு ஒன்றின் காரணமாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்க கூடும் என காவற்துறை சந்தேகித்துள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...