யாழில் தனது சகோதரியையும் மைத்துனைனயும் கொலை செய்த நபருக்கு மரண தண்டனை வழங்கி நீதிபதி இளஞ்செழியன் அதிரடி..

Share this post:

nee

யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலை வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட அருணாச்சலம் குகணேஸ்வரன் என்பவருக்கு, மரண தண்டனை வழங்கி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

சகோதரியையும் மைத்துனைனயும் கொலை செய்ததுடன் மருமகனைக் காயப்படுத்தி கொலைசெய்ய முயற்சி செய்ததாகக் குற்றம் சுமத்தி குணா என்றழைக்கப்படும் அருணாசலம்குகனேஸ்வரன் என்பவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் யாழ் மேல் நீதிமன்றத்தில்இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீர்வேலி மேற்கில் கடந்த 2011ம் ஆண்டு மார்க்கண்டு உதயகுமார் என்பவரையும், அவருடைய மனைவியாகிய உதயகுமார் வசந்திமாலா என்பவரையும் கொலை செய்தததுடன், அவர்களின் மகனான உதயகுமார் குகதீபனைக் காயப்படுத்தி, அவர் மீது கொலை முயற்சிமேற்கொள்ளப்பட்டதாக, எதிரி குணா என்றழைக்கப்படும் அருணாசலம் குகனேஸ்வரன்என்பவருக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்புக்கு எதிராக நாளை மேன்முறையீடு செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...