செல்போன் ஸ்கிரீனை உடைத்த மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவர்…..!

Share this post:

mu

தனது செல்போன் ஸ்கிரீனை உடைத்த மனைவியை வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்துள்ளார்.

சீனாவின் நின்சியா ஹூய் பகுதியில் உள்ள இன்சுவான் நகரை சேர்ந்தவர் சென். அவரது கணவர் சூ(28). அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சூ வேலையில்லாமல் சுற்றித் திரிந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 15ம் தேதி வெளியே சென்ற சூ வீடு திரும்பியபோது தனது ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் உடைந்திருந்ததை பார்த்து கோபம் அடைந்தார். சென் தான் உடைத்திருக்க வேண்டும் என கருதி தூங்கிக் கொண்டிருந்த அவரை கட்டையால் தலையில் அடித்துக் கொன்றார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சூவை நகர் முழுவதும் தேடினர். பின்னர் ஒரு கடையில் நின்று கொண்டிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் சென் தனது கணவருடன் சண்டை போட்ட பிறகு அந்த ஸ்மார்ட்போனை தரையில் வீசியபோது அதன் ஸ்கிரீன் நொறுங்கியதாக உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...