இளம்பெண்களுடன் உல்லாசம்! நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம்….!

Share this post:

dsd

இளம்பெண்களுக்கு காதல்வலை வீசி ஆபாச புகைப்படங்கள் மூலம் மிரட்டியது ஏன் என பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார் சாமுவேல் என்ற இளைஞர்.

சென்னை சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த கன்யா என்ற இளம்பெண்ணின் தாயார் கடந்த 25 ஆம் திகதி இரவு சிந்தாதிரிபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் குறிப்பிட்டிருந்ததாவது, சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சாமுவேல் என்ற இளைஞர் தனது மகளை நீண்ட நாட்களாக காதலிப்பதாக பின் தொடர்ந்து வந்துள்ளான்.

ஆனால் என் மகள் அவரது காதலை ஏற்க மறுத்துள்ளதால் அந்த இளைஞர் தனது முகநூல் பக்கத்தில் என் மகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து (மார்ப்பிங்) வெளியிட்டுள்ளார்.

இதைத் தவிர, ஏராளமான கல்லூரி பெண்களை காதலிப்பதாக கூறி உல்லாச லீலைகளில் ஈடுபட்டு ஏமாற்றியுள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு மீது சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சசி உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.

நேற்று முன்தினம் சாமுவேலை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், மயிலாப்பூரை சேர்ந்த ஷாம்(எ)சாமுவேல், இன்ஜினியரிங் படித்துள்ளார்.

பேஸ்புக் மூலம் இளம்பெண்களிடம் குறிப்பாக பணக்கார பெண்களிடம் நட்பாக பழகுவார், அவர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பல இடங்களுக்கு அழைத்து செல்வார்.

இவரது தந்தை கார்களை விற்கும் ஏஜெண்டாக இருப்பதால் விதவிதமான கார்கள் மூலம் பெண்களை கவர்ந்துள்ளார்.

தொடர்ந்து அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து, அதை ரகசியமாக வீடியோவாக எடுத்து வைத்துக் கொள்வார்.

இதனை காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார், இவர்களை தனது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதற்காகவே நீலாங்கரை அருகே தனியாக வீடு வாடகைக்கு எடுத்து இளம் பெண்களிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சாமுவேலால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் தொடர்ந்து புகார் அளித்து வருவதால் இவர் மீது குண்டர் சட்டம் பாயும் வாய்ப்புள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...