ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள்: மாமனார் செய்த விபரீத செயல்…!

Share this post:

killed

தமிழகத்தில் ஆசைக்கு இனங்க மறுத்த மருமகளை, வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்ற மாமனாரின் செயல்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நாட்டின் சிதம்பரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு ஜனனி என்ற மகளும், பசுபதி, அமரிநாத், என இரு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் மாணிக்கம் தனது மகள் ஜனனியை சிதம்பரம் மாவட்டத்தின் குடிமூளையில் உள்ள இளைஞர் ஒருவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளார்.

ஜனனிக்கு 3 குழந்தைகள் உள்ளது, திருமணம் முடிந்த நாட்களில் இருந்தே ஜனனியின் மாமனார் ஜனனியிடம் இரட்டை அர்த்தம் உள்ள வார்த்தைகளாகவே பேசி வந்துள்ளார். இது குறித்து ஜனனி அவரின் கணவரிடம் தெரிவித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மாமனார், அவரிடம் பல முறை தவறாக நடக்க முயன்றுள்ளார். இதையும் அவர் தன் கணவரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரோ எதுவும் தெரியாது போல் இருந்துள்ளார். தன் ஆசைக்கு இணங்காத ஜனனியை அவரது மாமனார் விஷத்தை அவரது வாயில் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதற்கு அவரது கணவரும் உடந்தையாக இருந்துள்ளார். அவர்களிடம் இருந்து தப்பி வந்த ஜனனி பொலிசில் புகார் தெரிவித்தார்.

பொலிசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...