மட்டக்களப்பில் கடவுளாக மாறினார் ‘பிக்கப்‘ சாரதி!! நடந்தது என்ன?

Share this post:

pi

மட்டக்களப்பில் கடவுளாக மாறினார் ‘பிக்கப்‘ சாரதி!! நடந்தது என்ன? மட்டக்களப்பில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் களுமுந்தன் வெளியினைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தும்பங்கேணி பகுதியில் விபத்து இடம்பெற்ற வேளை வீதியால் சென்று கொண்டிருந்த பிக்கப் வாகனமொன்று விபத்தில் காயமடைந்த இளைஞனை ஏற்றி கொண்டு அருகிலிருந்த பழுகாமம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை வழங்குவதற்கு அதிகாரிகள் காணப்படாமையினால் பிக்கப் சாரதி அவருடைய வாகனத்தில் காயமடைந்த இளைஞனை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையிலுள்ள இளைஞனின் நிலையை அறிந்து துரிதமாக செயற்பட்ட களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் காயமடைந்தவருக்கு சிகிச்சை அளித்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மனிதநேயம் மிக்க சாரதி மற்றும் வைத்தியசாலையின் ஊழியர்களின் துரித முயற்சியின் பலனாக குறித்த இளைஞனின்உயிர் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...