குவைட்டில் இலங்கை பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள கொடுமை!

Share this post:

pen

கடந்த இருவருடங்களுக்கு முன்னர் வீட்டுப்பணிப்பெண்ணாக குவைட் நாட்டிற்கு சென்ற நொச்சியாகம கொகுன்நேவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரை மீண்டும் இந்நாட்டிற்கு அழைத்து வர முடியாத ஆதரவற்ற குடும்பமொன்று தொடர்பில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் வேலை பார்க்கும் வீட்டின் உரிமையாளரினால் அவர் பல்வேறு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சுஜானி ராஜபக்ஸ கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் குவைட்டிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்றிருந்த நிலையில் , கடந்த 2015ம் ஜூன் மாதத்தின் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியாது உள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் , அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் இது தொடர்பில் கவனயீனத்துடன் செயற்படுவதாக அவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் , குறித்த பெண் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

அவரின் கைகள் உடைந்த நிலையில் , பேச முடியாத நிலையில் அவர் காணப்படுவதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...