இலங்கையில் பயங்கரம்…!10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்; குடும்பஸ்தர்..!

Share this post:

10

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-06, டீன் வீதி, ஹைராத் பள்ளி பகுதியில் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை நேற்று (26.09.2016) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிப்புக்குள்ளானதாக கருதப்படும் குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது பற்றி மேலும் தெரிவருவதாவது..,

தனது நண்பியின் வீட்டுக்கு குறித்த சிறுமி நேற்று விளையாடுவதற்குச் சென்ற வேளையில் நண்பியின் தந்தை குறித்த சிறுமியை அவரது வீட்டில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பெற்றோரிடம் அச்சிறுமி தனக்கு நடந்தவற்றை தெரிவித்ததை அடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு குறித்த குடும்பஸ்தரை கைது செய்தனர்.

இச்சம்வவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...