பந்தயம் கட்டி பெண் ஒருவரை நிர்வாணப்படுத்திய இளைஞர்களின் வக்கிர செயல்!

Share this post:

siru

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 20 வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்கள் பந்தயம் கட்டி பெண்களை நிர்வாணப்படுத்தும் செயலலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். இரண்டு பேர் தப்பித்து ஓடியுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் லூதியானாவில் 34 வயது பெண் ஒருவர் தனது கணவன் மற்றும் மகளுடன் வீதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி சிரித்து விட்டு ஓடியுள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண்ணின் கணவர் அந்த மூவரையும் விரட்டி சென்றதில் ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார். மற்ற இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளனர். இந்த இளைஞர்கள் ரூ.8000 பந்தயம் கட்டி இந்த செயலில் ஈடுபட்டதாகவும், இதேப்போல் பலமுறை செய்துள்ளனர்.

காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய இரண்டு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...