மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!! தாயின் கதறல்…! (Video)

Share this post:

th

இந்திய காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அருகே தனியார் கல்லூரி ஒன்றின் விடுதியில் தங்கியிருந்த ஹேம மாலினி என்பவர், கல்லூரி விடுதி அறையில் தனது துப்பட்டாவல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சக மாணவிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் காவற்துறை, மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உயிரிழந்த மாணவி திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்தது.

Share This:
Loading...

Related Posts

Loading...