இலங்கை வெற்றிலைக்கு வந்த சோதனை..!

Share this post:

ve

ஒவ்வொரு மதத்தினரின் கலாச்சாரம் மற்றும் ஏனைய விடயங்களுக்கு வெற்றிலையின் பங்கு மகத்தானதாக காணப்படுகின்றது.

எனினும், தற்போது குறித்த வெற்றிலைக்கு நாட்டின் பல பிரதேசங்களிலும் என்றுமில்லாதவாறு விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிலை ஒன்றின் விலை 7 ரூபாவாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெற்றிலைக்கு அதிகம் பற்றாக்குறை நிலவுவதால் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் வெற்றிலைகளின் அளவு குறைந்துள்ளமையே வெற்றிலை விலை அதிகரிப்புக்கு காரணம் என கூறப்படுகின்றது.

இந்நிலையில், எதிர்வரும் காலங்களில் வெற்றிலைக்கு தட்டுபாடு நிலவுமாயின் வெற்றிலையின் விலை பத்து ரூபாவுக்கு அதிகமாக விற்கப்படலாம் என நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...