விமானத்தில் இருந்து அலறியடித்து கொண்டு ஓடிய பயணிகள் – காரணம் என்ன? (Video)

Share this post:

vi

அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானத்தில் பலத்த வெடிசத்தம், புகை மூட்டம் ஏற்பட்டதால் விமானிகள் அனைவரும் பதற்றப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று கியூன்ஸ்லெண்ட் பகுதியில் இருந்து கடந்த வியாழக்கிழமை பயணிகளுடன் புறப்பட்டுச்சென்றது.

அப்போது விமானத்தின் இன்ஜின் பிரச்சனை காரணமாக விமான ஓட்டுநர் உடனடியாக பிரிஸ்பேனுக்கு விமானத்தை செலுத்தியுள்ளார்.

பயணிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்குள் பயணிகளின் சீட்டிற்கு அடியில் பயங்கர வெடிசத்தத்துடன் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் விமான பயணிகள் அனைவரும் பயத்தில் அலறியுள்ளனர், இச்சம்பவத்தை அவ்விமானத்தில் பயணம் செய்த சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...