8 வருடத்தில் 7 கல்யாணம்.. மிரட்டிய பெண்: புகார்களுடன் கிளம்பி வந்த 3 கணவர்கள்….

Share this post:

laa

பெங்களூரைச் சேர்ந்த 38 வயதுப் பெண் 8 வருடத்தில் 7 பேரைத் திருமணம் செய்து பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். கல்யாணம் செய்த சில மாதங்களிலேயே கணவர்களை விட்டு விலகி விடும் இவர் அவர்களிடமிருந்து பணம் பொருட்களை மோசடி செய்துள்ளதாக 3 கணவர்கள் தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

ஒரு படத்தில் வடிவேலு போலீஸாக நடித்திருப்பார். அவரிடம் ஒவ்வொரு கணவராக வந்து தங்களது மனைவி குறித்து புகார் தருவார்கள். அந்தக் கதையாக இருக்கிறது இந்த பெங்களூர்ப் பெண்ணின் கதை.

மோசடியில் ஈடுபட்டு கைதாகியுள்ள அந்தப் பெண்ணின் பெயர் யாஸ்மின் பானு. 38 வயதாகிறது. பெங்களூர் கே.ஜி.ஹள்ளி பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் பெயர் இம்ரான். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். யாஸ்மின் பானும், இம்ரானும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டனர். யாஸ்மின் அதற்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறிப் போய் அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

மனைவி மீது புகார்

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு யாஸ்மின், இம்ரானுக்குப் போன் செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் பணம் தர முடியாது என்று மறுத்து விட்ட இம்ரான், போலீஸில் தனது மனைவியை மாட்டி விட முடிவு செய்தார். கேஜிஹள்ளி காவல் நிலையத்திற்குப் போய் யாஸ்மின் மீது புகார் கொடுத்தார்.

பணம் கேட்டு மிரட்டல்

இம்ரான் கொடுத்த புகாரில், என் மனைவி யாஸ்மின் என்னை திருமணம் செய்துவிட்டு, பின்னர் வேறுவொருவரை திருமணம் செய்தார். அப்போது என்னிடம் அவர் பல லட்சம் கேட்டு மிரட்டுகிறார். செய்து பெற்றார். அவரது மிரட்டலுக்கு பயந்து பணம் கொடுத்தேன். அதன் பின் எனக்கு பிரச்னை இல்லை. ஆனால் அவர் அடுத்தடுத்து பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த தகவல் கிடைத்தது.

சொகுசு வாழ்க்கை

எனக்கு பின்னர் அப்சல் என்பவரை திருமணம் செய்தார். அவரை பிளாக் மெயில் செய்து பணம் பறித்த பின்னர், 3வதாக சையத் ஷேக் என்பவரையும், 4வதாக ஈராஜ், 5வதாக ஆசீப், 6-வதாக சோயப் என 7 பேரை அடுத்தடுத்து திருமணம் செய்தார். அவர்களிடம் என்னை போன்று சில ஆதாரங்களை காட்டி மிரட்டி பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

கைது செய்த போலீஸ்

எனது மனைவியை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார் இம்ரான். இந்தப் புகாரைத் தொடர்ந்து மற்ற இரு கணவர்களான சோயப் மற்றும் அப்சல் ஆகியோரும் புகார்கள் கொடுத்தனர். 3 கணவர்கள் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் யாஸ்மின் மீது பணம் கேட்டு மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். கடைசியில் நீங்களும் அழகாத்தான் இருக்கீங்க என்று போலீசிடம் சொல்லாமல் இருந்தால் சரிதான்!.

Share This:
Loading...

Related Posts

Loading...