புலம்பெயர் தமிழர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில் பாரிய மோசடி…! அவதியில் மக்கள்…!

Share this post:

ve

வெளிநாடுகளிலுள்ள தூதுவரலாயங்களில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் தமிழர்களை ஏமாற்றும் நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருதாக தெரியவந்துள்ளது.

கடவுச்சீட்டை வழங்க வெளிநாடுகளில் செயற்படும் இலங்கை தூதுதரகங்களின் அதிகாரிகள் பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக கோருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மஹிந்த அரசாங்கத்தின் போது நியமிக்கப்பட்டவர்களே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது.

இலங்கையில் புதிய அரசாங்கம் ஏற்பட்டதன் பின்னர், சலக துறைகளிலும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் நீக்கப்பட்டிருந்தனர்.

கடந்த ஆட்சியின் போது வெளிநாடுகளுக்கான மோசடி தூதுவர்கள் மாத்திரமின்றி, அவர்களின் தேவைக்கமைய மோசடியான ஊழியர்களும் தூதுவராலயங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஒருவராகும். நல்லாட்சி அரசாங்கத்தினால் பலர் நீக்கப்பட்ட போதிலும் பலர் அந்த சேவையில் தொடர்வது தெரியவந்துள்ளது.

தற்போது வெளிவிவகார அமைச்சரினாலே குறித்த நபர் நீக்கப்பட வேண்டும். ஐரோப்பிய தூதுவர் அலுவலகத்தில் சேவை செய்யும் சில ஊழியர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்த பல்வேறு முறைகளில் பண மோசடி செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் அப்போதைய வெளிவிவகார நடவடிக்கை அமைச்சின் அதிகாரிகளுக்கு, ராஜபக்சர்களின் ஆசிர்வாதம் காணப்பட்டமையினால் அவை தொடர்பில் செயற்படுவதற்கு முடியவில்லை.

பல மோசடிக்காரர்கள் அகதிகளாக வெளிநாட்டில் வாழும் தமிழ் இலங்கையர்களிடம் கடவுக்சீட்டு பெற்றுக் கொடுப்பதாக கூறி இலஞ்ம் பெறப்பட்டுள்ளது. இதற்காக குடிவரவு குடியகல்வு அலுவலக அதிகாரிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. இந்த மோசடியாளர்களினால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயண கடவுச்சீட்டிற்கான விண்ணப்பங்களை தூதரகங்களில் ஒப்படைக்கும் போது அங்கு பல்வேறு குறைப்பாடுகள் உள்ளதாக கூறி பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த விண்ணப்பங்களை தூதரகங்களில் ஒப்படைப்பதற்கு முன்னர் பணம் கோரப்படும். அவ்வாறு குறித்த பணம் வழங்க முடியவில்லை என்றால் அவர்களின் விண்ணப்பங்களை தாமதமாக்கப்படும். அவ்வாறு தாமதமாகும் சந்தர்ப்பங்களில் அழுத்தம் பிரயோகித்து மீண்டும் பணம் கோரப்படும். பல சந்தர்ப்பங்களில் பணம் செலுத்தவில்லை என்றால் இலங்கைக்கு சென்று பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என கூறி தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம், தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

எதுவித பிரச்சினைகளும் இன்றி கடவுச்சீட்டை வழங்க 2 இலட்சம் தொடக்கம் ஐந்து இலட்சம் ரூபா வரையில் இலஞ்சமாக பணம் கோரப்படுகிறது. எனினும் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்திற்காக இவ்வாறான பணத்தை தமிழர்கள் செலுத்துவதாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கை தனிநபர்களாக செய்வதில்லை. இலங்கையிலுள்ள முக்கிய திணைக்களங்களில் உள்ள நபர்களும் இதற்கு உடந்தையாக உள்ளனர்.

இவ்வாறான மோசடி கும்பல்களை விரைவில் இனங்கண்டு பணி நீக்கம் செய்ய வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...