யாழ் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தும் பல்கலைக்கழகம் போகாது தேங்காய் வியாபாரத்தில் ஈடுபடும் மாணவணின் பரிதாபம்!

Share this post:

ujni

யாழ் பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்த கிளிநொச்சி மாணவர் ஒருவர் அதனைக் கைவிட்டு தற்போது தேங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

அதற்கு காரணம் யாழ் பல்கலைக்கழகத்தில் காணப்பட்டு வரும் பகிடிவதையே என நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். விஜயகுமார் வசந்தகுமார் எனும் மாணவனே இவ்வாறான துன்பநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற பலர் திண்டாடுகின்ற நிலையில் ஒரு மாணவனுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது என்பது வேதனைக்குரியது.

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த பகிடிவதைகள் நிறுத்தப்பட வேண்டும் அப்போதே அங்கு கற்க வரும் மாணவர்கள் தமது எதிர்கால கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடருமானால் பலருக்கும் இவ்வாறான நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமான இவை நிறுத்தப்படவேண்டும்.

அதே போல் குறித்த மாணவனுக்கு மீண்டும் உயர்கல்வியினை தொடர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்டுக்கொண்டார்.

Share This:
Loading...

Related Posts

Loading...