சிறுமியொருவர் கடத்தி துஷ்பிரயோகம் – தந்தை மற்றும் மகன் கைது!

Share this post:

sss

சிறுமியொருவரை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மற்றும் மகனை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

15 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் பல்லம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிறுமியொருவரை வீடொன்றில் அடைத்து வைத்துள்ளதாக காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

தான் இளைஞர் ஒருவரை காதலித்த நிலையில் அவரின் கோரிக்கைக்கு இணங்க பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வௌியேறியதாக குறித்த சிறுமி தெரிவித்துள்ளார்.

சிறுவயது சிறுமியொருவரை கடத்தி வந்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காக குறித்த இளைஞர் மற்றும் அவருக்கு உதவிய அவரின் தந்தை ஆகிய இருவரும் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...