ஆசையை நிறைவேற்றாத பிள்ளைகள் – தந்தையின் அதிர்ச்சிகர முடிவு

Share this post:

r

தமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை காணமுடியாது மன உளைச்சலுக்கு உள்ளான 71 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மஹவல ரதலவெவ பிரதேசத்தை சேர்ந்த இவர், தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் தனது பிள்ளைகளிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தான் உங்களை பார்க்க வேண்டும் என தனது பிள்ளைகளிடம் கோரியுள்ளார்.

இதனையடுத்து, ஹொரனை பகுதியில் வசித்து வந்த வந்த மகன் ஒருவர், தந்தையை காண சென்றுள்ளார். இதன் போது தனது பேரப்பிள்ளைகளை காண ஆசையாக இருப்பதாக தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த ஆசை நிறைவேறாத காரணத்தினால் குறித்த நபர், கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே அவர் விஷம் குடித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share This:
Loading...

Related Posts

Loading...