யாழ் பல்கலையில் மது அருந்திவிட்டு இளைஞர்கள் அட்டகாசம் – பொதுமக்கள் அவதி..!

Share this post:

f

யாழ்ப்பாண பல்கலைக்கழ சுற்றுப்புறச் சூழல்களில் இளைஞர்கள் மது அருந்தி விட்டு அட்டகாசம் புரிவதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மது அருந்தி விட்டு அட்டகாசம் புரியும் இளைஞர்கள் தகாத செயல்களிலும் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த மக்கள் தெரிவித்தனர். தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் தெரிவித்தனர்.

குறிப்பாக வீதிகளில் வருபவர்களை மறித்து அட்டகாசம் புரிகிறார்கள். இது
தொடச்சியாக இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் யாழ் பல்கலைக்கழகமும் பொலிசாரும் உரியகவனம் செலு த்துமாறு பொதுமக்கள் உட்பட பலர் கேட்டுக்கொண்டனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...