பொலிஸிற்கு பயந்து ஆற்றில் குதித்த இளைஞனுக்கு நடந்த சோகம்..!

Share this post:

po

அவிசாவளை – குடகம பிரதேசத்தில் களனி கங்கையில் அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சிலரை காவற்துறை சுற்றிவளைத்து கைது செய்துள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது தப்பியோடிய சந்தேக நபர்களில் ஒருவர் களனி கங்கையில் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

இதன்போது காவற்துறை சிறப்பு படை பிரிவு அதிகாரிகள், அந்த நபரை காப்பாற்ற முற்படவில்லை என பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் அதே பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...